Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக மக்களுக்கு அரசு அறிவித்த திடீர் சர்ப்ரைஸ்!! தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை!!

A sudden surprise announced by the government to the people of Tamil Nadu

A sudden surprise announced by the government to the people of Tamil Nadu

Tamilnadu: நவம்பர் 1 தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததை தொடர்ந்து நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை புதன்கிழமையன்று பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1 அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் சென்று கொண்டாடும்   வசதிக்காக  அரசு விடுமுறை அளித்து அறிக்கையை வெளியிட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல இன்றே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது இன்றே மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். அதனால் பெற்றோர்களின் வசதியை கருத்தில் கொண்டு நாளை புதன்கிழமை அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 9/11 /2024 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Exit mobile version