Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டு முறை டி20 கோப்பையை வென்றவர்! தலைமை பயிற்சியாளராக நியமனம்!!

#image_title

இரண்டு முறை டி20 கோப்பையை வென்றவர்! தலைமை பயிற்சியாளராக நியமனம்!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக கேப்டனாக இருந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கிரிக்கெட வீரர் டேரன் சமி அவர்களை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம்.
கிரிக்கெட் வீரர் டேரன் சமி தலைமையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பை வென்றுள்ளது. 2016ல் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்ததற்கு 2016ம் ஆண்டு செயின்ட் லூச்யாவில் உள்ள பியாஸ்ஜார் கிரிக்கெட் மைதானத்திற்கு டேரன் சமி அவர்களுடைய பெயர் சூட்டப்பட்டது.
39 வயதான டேரன் சமி அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பல போட்டிகள் விளையாடியுள்ளார்.  ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அல்லாத இயக்குநராக டேரன் சமி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து டேரன் சமி அவர்கள் அடுத்த மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டேரன் சமி அவர்கள் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் ஆண்ட்ரோ கோலே அவர்களை டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தன்னை தேர்வு செய்ததை பற்றி டேரன் சமி அவர்கள் “இது சவாலான விஷயம்தான் இருந்தாலும் எனக்கு பிடித்திருக்கின்றது. நான் தயாராக இருக்கிறேன். நான் அணியின் கேப்டனாகவும் வீரராகவும் இருந்த பொழுது ஏற்படுத்திய அதே தாக்கத்தை டிரெஸ்ஸிங் ரூமில் ஏற்படுத்துவேன். கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை கற்றுக் கொடுப்பேன். வெற்றியின் மீது உள்ள ஆசையை கற்றுக் கொடுப்பேன். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மீதான அளவற்ற அன்பையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன். என்னுடைய திறமை அனைத்தையும் வீரர்களுக்கு கற்றுத் தருவதற்கு ஆர்வத்துடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Exit mobile version