இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. தற்போது 5வது போட்டியானது நடைபெற்று வருகிறது.
இன்று தொடங்கிய 5 வது டெஸ்ட் போட்டியானது சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக தலைமை தாங்கினார். முதலில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் 4 வது போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வயது வீரர் கொன்ஸ்டாஸ். இவர் முதல் போட்டியிலேயே இந்திய அணியின் மூத்த ஜாம்பவான் வீரரான விராட் கோலியிடம் உடன் மோதலில் ஈடுபட்டார். அடுத்து விராட் விக்கெட் ஆன பின் ரசிகர்களிடம் சைகை செய்து சர்ச்சையை கிளப்பினார். இன்று நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீசிய போது அவரை சீண்டும் நோக்கத்தில் பேசியுள்ளார். இவர் செய்யும் இதுபோன்ற செயல் ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. அதனால் இவ்வாறு நீ நடந்து கொள்வதால் உன்னுடைய கரியர் க்கு நல்லது இல்லை என்று கூறி வருகின்றனர்.