சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!!

0
75
Aadi month special puja at Chamundeshwari Amman Temple!! Devotees Sami Darshan!!

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!!

பிரபலமான கோவில்களில் ஒன்றான சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் எழுந்தருளி உள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் மைசூரு மாவட்டத்தில் மட்டும் இல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக காணப்படும். இங்கு வீற்றிருக்கும் அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும், தசரா மற்றும் ஆடி மாதங்களில் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அந்த வகையில், நேற்று கன்னட ஆடி மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை என்பதால் கோவில் நடை அதிகாலை நான்கு மணிக்கே திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த பூஜையை காண பக்தர்கள் அனைவரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த சிறப்பு பூஜையை காண மத்திய மந்திரி ஷோபா மற்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா ஆகியோர் வந்துக் கலந்து கொண்டனர்.

சிறப்பு பூஜையை காண ஏராளமான பக்தர்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், சாமுண்டி மலைக்கு மேலே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, வாகனம் நிறுத்துவதற்கு லலிதா பேலஸ் மகாலின் பின்புறம் அமைந்துள்ள மைதானத்தில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு தரிசனம் பார்க்க வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களும் மன நிம்மதியாக சாமியை தரிசித்து சென்றுள்ளனர்.