திருத்தணியில் ஆடிகிருத்திகை திருவிழா கோலாகலம்!! தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்!!

0
89
Aadikrithikai festival in Tiruthani is a riot!! Police on intensive security duty!!

திருத்தணியில் ஆடிகிருத்திகை திருவிழா கோலாகலம்!! தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்!!

இன்று முதல் வருகின்ற பதினோராம் தேதி வரை திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாப்பட இருக்கிறது.

இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஐ.ஜி. கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆகிய அதிகாரிகள் ஆய்வு பணியில் மேற்கொண்டனர்.

இது குறித்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசியது,

திருத்தணி நகர் முழுவதுமே ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா பாதுகாப்பிற்காக மொத்தம் 1,600  க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் விளக்குகள், கண்காணிப்பு கோபுரங்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மூன்று டிரோன்கள் மூலமாக போக்குவரத்து நெரிசலைக் கண்காணித்து வருகின்றனர்.

மலைக்கோவில் மற்றும் பக்தர்கள் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் காவல் துறையினர் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கோவிலுக்கு செல்வதற்காக நாற்பது ரூபாய் கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.

எனவே, பொது மக்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பும், வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.