இங்கே எந்த வேலையும் பலிக்காது! அடுத்த பயிற்சியாளரும் அவர்தான்! அதிர்ச்சியில் ராகுல் டிராவிட்

0
172

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கின்றார். இலங்கை சுற்றுப்பயணத்தில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் தொடர்பான விவாதம் ஆரம்பமாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், டிராவிடின் செயல்பாடுகள் காரணமாக, தற்சமயம் அந்த விவாதம் மிகவும் சூடு பிடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் வரிசையில் புவனேஷ்வர் குமாருக்கு முன்னதாக தீபக் சாகர் அவர்களை இறக்கி இந்திய அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் டிராவிட் மிக முக்கியம் வியூகம் வகுத்து இருந்தார். இதன் காரணமாக, இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய அணிக்கு தற்சமயம் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் அவருடைய பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது இந்த நிலையில், அதன் பிறகும் கூட அவர் தான் பயிற்சியாளராக தொடருவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் அவருடைய பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெற்றி பெறவில்லை என்ற காரணத்தால், ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஆகவே பயிற்சியாளர் பதவிக்கு ரவியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆகாஷ் சோப்ரா உரையாற்றியிருக்கிறார். அதில் இந்தியாவின் பயிற்சியாளர் காண போட்டியில் ராகுல் டிராவிட் கலந்து கொள்ளமாட்டார் என்று நான் நினைக்கிறேன். அப்படி அவர் கலந்து கொண்டால் ரவி சாஸ்திரி மற்றும் திராவிட் உள்ளிட்டோர் இடையே கடுமையான போட்டி இருக்கும் இருந்தாலும் திராவிடத்திற்கு அணியின் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிவிக்க இயலாது. ரவி சாஸ்திரியே முதல் தேர்வாக இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் ராகுல் டிராவிட் ஒருவேளை பங்கு பெறவில்லை என்றால் ரவிசாஸ்திரி தான் மறுபடியும் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவார். அவரை எதிர்த்து டிராவிட்டை தவிர வேறு யாரும் போட்டியிட்டால் கூட வெற்றி பெற இயலாது. டி20 உலகக்கோப்பை முடிந்த பின்னர் கூட பயிற்சியாளர் பதவியில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.