Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூம்ரா வீசிய சூப்பர் யார்க்கர்… அவுட் ஆகிவிட்டு கைதட்டி பாராட்டிவிட்ட சென்ற ஆஸி பேட்ஸ்மேன்

பூம்ரா வீசிய சூப்பர் யார்க்கர்… அவுட் ஆகிவிட்டு கைதட்டி பாராட்டிவிட்ட சென்ற ஆஸி பேட்ஸ்மேன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடந்தது.

இந்தியாவுக்கு ஆஸி அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி 20 போட்டி நாக்பூரில் நடந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி 8 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய 7.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா சிறப்பாக பந்துவீசினார். அவர் பந்துவீசும் போது ஆரோன் பின்ச்சுக்கு அற்புதமான ஒரு யார்க்கரை வீசி அவரை பவுல்ட் ஆக்கினார். இந்த அபாரமான பந்தால் ரசிகர்கல் முதல் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். இந்த பந்தில் அவுட் ஆன பின்ச் கூட அதிர்ச்சியாகி பேட்டை தட்டி பூம்ராவுக்கு தன்னுடைய பாராட்டை தெரிவித்து சென்றார்.

Exit mobile version