ஹால் ஆஃப் ஃபேமில் ஏ பி டி வில்லியர்ஸ் ! பாராட்டி கடிதம் எழுதிய விராட் கோலி

0
92
AB de Villiers in Hall of Fame! Virat Kohli wrote a letter of appreciation
 ஐசிசி நேற்று இந்த வருடத்திற்கான  ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல் வெளியிட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் அலஸ்டர் குக், இந்திய வீராங்கனை நீது டேவிட் , தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஏ பி டி வில்லியர்ஸ் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.இதுகுறித்து விராட் கோலி ஏபி டி வில்லியர்ஸ்யை  பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

உங்கள் இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். அதற்கும் மேலாக ஹால் ஆஃப் ஃபேம் என்பது சிறந்த வீரர்களுக்கான ஒரு முக்கியமான பிரதிநிதித்துவம் ஆகும். அதுமட்டுமல்லாமல் உங்களை போன்றே உங்கள் திறமையும்  தனித்துவமானது  எப்போதும் மக்கள் உங்கள் திறமையை பற்றி பேசுகிறார்கள் அதுவும் சரிதான். உங்கள் திறமை அசாத்தியமானது உங்களுக்கு நிகர் நீங்கள் தான். என்னை பெருத்த வரை நீங்கள் தான் முழுமையான நம்பர் ஒன்.

அவருடன் 2011 முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அவருடன் விளையாடியுள்ளேன்.  கிரிக்கெட் மைதானத்தில் நீங்கள் விரும்பியதை செய்ய முடியும் என்ற பைத்தியகாரத்தனமான நம்பிக்கை உங்களுக்கு இருந்தது. நீங்கள் அதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பீர்கள் அதனால் தான் நீங்கள் சிறந்த வீரராக இன்று வரை திகழ்கிறீர்கள்.

2016 ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக 184 ரன்களை துரத்தினோம் அப்போது விக்கெட்டுகளை இழந்த நிலையில் களத்தில் என்னோடு களமிறங்கினார். அப்போது மெதுவாக ஆட வேண்டிய சூழலில் சுனில் நரைன் பந்து வீசினார் அனைவரும் சிங்கிள் எதிர் பார்த்த நேரத்தில் ஸ்கொயரில் 94 மீட்டரில் சிக்ஸ் அடித்து பறக்கவிட்டு அரங்கில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். அப்போது தெரிந்தது நீங்கள் விரும்பியதை செய்யும் ஒரு வீரர் என்று.

ஆட்டத்தை பார்ப்பவர்களை வெகுவாக ஈர்ப்பவர்களில் நீங்களும் ஒருவர். என்னை பொறுத்த வரை ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் வைத்திருக்க கூடிய உயர்ந்த மதிப்பு இதுவே. நீங்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளீர்கள் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இதை விட சிறந்த மரியாதை வேறு எதுவும் இல்லை என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.