அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு ஊழியருக்கு இணையாக உயரும் சம்பளம்!!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இது உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்படும்.
இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அடுத்து ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தற்பொழுது அதற்காக ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.அந்த நிலையில் இப்பொழுது மத்திய பிரதேசத்தில் அகலவிலைப்படியில் உயர்வு ஏற்ப்பட்டு உள்ளதால் மத்திய அரசுக்கு இணையாக இனி மாநில அரசு ஊழியர்களுக்கும் அகலவிலைப்படி பண உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த கோரிக்கை நீண்ட நாளாக இருக்கும் பட்சத்தில் இதனை கூடிய விரைவில் உயர்த்தி தர வேண்டும் என்று ஊழியர்கள் அரசிடம் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் 38 சதவீதம் வழங்கப்படும் ஊதியம் தற்பொழுது அகலவிலைப்படி உயர்வில் இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கியதில் 42 சதவீதம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான் அறிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்படும் உயர்வு சம்பளம் ஜூலை மாதத்தையும் சேர்த்து ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்றார். இந்த கூடுதல் சம்பளத்தின் மூலம் மட்டும் சுமார்7.5 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது.