கலைக்கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! இவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை.. வெளிவந்த ஸ்ட்ரிட் ரூல்!!
மத்திய மற்றும் மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் வருகிறது.அந்தவகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென்று பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்தது.
அந்த கூட்டத்தொடரில் பார்வை திறன் அற்றோர், செவித்திறன் அற்றோர் என அனைவருக்கும் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் வாசிக்கும் கருவி சைகை மொழி பெயர்ப்பாளர் பயிற்சி என அவர்களுக்கு உதவி புரியும் வகையில் பல புதிய திட்டங்களை அமல்படுத்தியது.
அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் நிதி உதவி என தொடங்கி பல்வேறு திட்டங்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா கல்வி.
அதாவது மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த கல்லூரிகளில் படிக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து எந்த ஒரு கட்டணத்தையும் வசூல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர்.ஆனால் சில கல்லூரிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை வசூல் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
தொடர்ந்து இவ்வாறான புகார்கள் வருவதால் உயர் கல்வித் துறை செயலாளர் இதுகுறித்து அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து கல்வி கட்டணத்தை வசூல் செய்வதாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாகவே உள்ளது.
இவர்களிடமிருந்து கல்வி கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிட்ட பொழுதும் இவ்வாறு செய்வது மிகவும் தவறு. அந்த வகையில் தமிழக அரசின் அரசாணையை மீறி செயல்படுபவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அது மட்டுமின்றி இது குறித்த அறிவிப்பை முறையாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இந்த இணை இயக்குனர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் மற்றும் மாணவிகள் கல்வி கற்பதில் எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.