மாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!!
இன்று அனைத்து அரசும் பெண்களுக்கு பல சலுகைகளையுள் பல சிறப்பான திட்டங்களையும் செய்து வருகின்றது. இவை அனைத்தும் பெண்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைய வேண்டும் என்று அரசு பல திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்காக தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அங்கு பேருந்தில் ஏறும் முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கையை பின்பற்றி வருகின்றார்கள் இதனால் பேருந்தில் முதல் பயணியாக பெண்களை ஏற்ற கூடாது என்ற வழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் முதல் பயணியாக பெண் ஏற கூடாது என்று பேருந்தின் கண்டக்டர் மற்றும் ஓட்டுனர் தடுபதாக கூறப்பட்டு வருகின்றது.
அப்படி பெண்கள் ஏறினாள் ஆபத்து மற்றும் டிக்கெட் விற்பனை பெரிய அளவு லாபம் இருக்காது என்று கூறுவதாகவும் இதனால் பெண்களை ஏற்ற மறுபதாகவும் கூறப்பட்டு வருகின்றது.
இந்த போன்ற சம்பவம் வருகால தலைமுறைக்கு மிகவும் தீங்காக அமையும் என்பதால் இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது. இதனால் ஒடிசா அரசு ஏறும் முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் ஏற்ற வேண்டும் என்றும் இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மகளிர் ஆணையம் வலியுர்த்தி வருகின்றது.