முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

0
382
#image_title

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டமான சென்னை வெள்ள நீர் வடிகால் வாரிய திட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்ற சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் – டிசம்பர் மாத மழையின் போது சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. சென்னைக்கு உள்ளே சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்துவிடுகிறது. தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் மிக வேகமாக வடிந்துவிட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சென்னையில் மழை பெய்தாலே வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதிகள் உள்ளது. முதலமைச்சர் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் டிசம்பர் மாத மழையின் போது இந்த திட்டம் சிறப்பாக பயன் அளித்தது என்றே கூறலாம். ஆனாலும் கூட இதனை சிலர் தவறாக பயன்படுத்த முயன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த மழை நீர் குழாய்களில் கழிவு நீரை வெளியேற்ற முயன்றுள்ளனர். மழை நீர் குழாய்களில் கழிவு நீர் செல்லும் குழாய்களை மாட்டி வீடு, அலுவலகங்களில் இருக்கும் கழிவு நீர்களை வெளியேற்ளியுள்ளனர். மொத்தம் 1470 இடங்களில் இப்படி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மழை காலங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். அதனால் குழாயில் கழிவு நீர் கலக்கிறதா என்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர். மழை நீர் குழாயில் கழிவுநீர் கலந்தால் அந்த பகுதியே சாக்கடை ஆகிவிடும். அதுமட்டுமின்றி சாக்கடை கலந்துவிட்டால், அந்த நீரை ஏரிகளுக்கு அனுப்ப முடியாது.

தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் தான் மழை நீர் குழாய்களில் கழிவுநீர் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1470 இடங்களில் கழிவுநீர் குழாய்களை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழாய்கள் துண்டிக்கப்பட்டு மழைநீர் வடிகால் அமைப்பு சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதை செய்தவர்கள் மீது 5.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.