பெண்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்! சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்!

0
182

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் செய்தார்கள், இதற்கு சாய்னா நேவால் எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுகிறதோ அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துக் கொள்ள இயலாது, பிரதமர் நரேந்திர மோடி மீது அரசியல்வாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கின்றேன் என்று பதிவு செய்திருந்தார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு பதில் தெரிவித்த நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தெரிவித்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

சித்தார்த்தின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்ற தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்ட்ரா காவல்துறையிடம் புகார் வழங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், உங்கள் வலைப்பதிவில் பதிவிட்ட சரியாக புரிந்து கொள்ளப்படாத என்னுடைய நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகின்றேன் என சித்தார்த் தன்னுடைய வலைப்பதிவில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அதோடு என்னுடைய வலைதள பதிவில் இருக்கின்ற வார்த்தையை நகைச்சுவையானது மட்டுமே உள்நோக்கம் கொண்டது இல்லை என்றும், தெரிவித்திருக்கிறார். தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்பதாக நடிகர் சித்தார்த் தன்னுடைய வலைப்பதிவில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல தங்களது வலைதள பதிவுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த இயலாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன் எப்போதும் நீங்கள் தான் என் சாம்பியன் என்றும், கூறியிருக்கிறார் நடிகர் சித்தார்த்.