உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற  குகேஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

0
101
Actor Sivakarthikeyan personally invited world chess champion Gukesh and gifted him an expensive watch

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன்  உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து விலை உயர்ந்த கைக்கடிகாரம் பரிசாக  கொடுத்து இருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த குகேஷ் செஸ் விளையாட்டு வீரரான இவர் பன்னாட்டு விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடினார். இவர், சீனாவை சேர்ந்த வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக்கணக்கில்) வீழ்த்தி சாதனை படைத்து உலக சாம்பியன்ஷிப் கோப்பையை  வென்றார்.

இதனால் இவர் 18 வயதிலேயே உலக சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் ஆனார். இவரது சிறப்பான ஆட்ட திறமையை  பார்த்து இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.11 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது. இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் பரிசுகளும் கொடுத்து வருகிறார்கள். தமிழக முதல்வர், அரசியல் தலைவர்கள் பிரபலமானவர்கள் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் சிவா கார்த்திகேயன்  குகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். மேலும், கேக் வெட்டி அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும்,  குகேஷ்-க்கு விலை உயர்ந்த கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி அவரே  குகேஷ் கையில் கடிகாரத்தை அணிவித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்  குகேஷ்க்கு சர்ப்ரைஸ்  கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.