Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு சென்னை வந்திருந்தார் தோனி. அப்போது படப்பிடிப்பு தளம் ஒன்றில் தோனி, விஜய் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த திடீர் சந்திப்பு அன்றைய நாளில் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. தோனி, விஜய்யின் இந்த சந்திப்பு அன்றைய நாளில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நடைபெற உள்ளது என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அதற்கு முன்பு, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டியின் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர்களை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். இந்நிலையில், டோனியை நடிகர் விக்ரம் நேரில் சென்று சந்தித்துள்ளார். அவர்கள் சந்தித்தபோது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மகான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. ‘மகான்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Exit mobile version