Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராமநாதபுரத்தில் பரபரப்பு! முன்னாள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கரு கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி புகார் வழங்கியிருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் 8 பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து பெங்களூரில் வைத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயற்சி செய்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, காரில் அனுப்பி வைத்தனர். அப்போது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றியதாகவும் தன்னை பார்த்துக்கொள்வேன் என்று தெரிவித்ததால் மட்டுமே வழக்கை வாபஸ் பெற்றதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Exit mobile version