Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடைசி போட்டியில் மட்டும் என்னை சேர்ப்பதா? முன்னாள் கேப்டன் ஆதங்கம்

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் விளையாடியபோது பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது இடம்பிடித்திருந்தார். ஆனால் மூன்று டெஸ்ட் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு தருவதாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்போது அவர் விளையாட மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், சர்பராஸ் அகமது கடைசி போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா உல் ஹக்  சர்பராஸ் அகமது விளையாட மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவரது ஒதுக்கீடு மற்றும் தொடரின் கடைசி போட்டியில் விளையாட அழைத்ததால் தயக்கம் காட்டினார். நான் அந்த நிலையில் இருந்திருந்தாலும் அதே மாதிரிதான் செய்திருப்பேன். ஒரு தொடரில் முன்னதாக அனைத்து போட்டிகளிலும் சேர்க்கப்படாமல், கடைசி போட்டியில் மட்டும் சேர்க்கப்பட்டால் வீரர்கள் தயக்கம் மற்றும் உறுதியற்ற நிலையை உணர்வார்கள் என்று கூறினார்.
Exit mobile version