பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! 

0
219
#image_title

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!!

இந்தியாவில் தற்போது பல வகையான மோசடி நடந்து வருகிறது. இதில் ஜிபே மூலம் திருடுவது, இணைய வழி புதிய திருட்டுக்கள்  இது போன்று பல திருட்டுக்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு திருட்டு புதிதாக உருவாகியுள்ளது. பான்  கார்டுகளை வைத்து உங்களின் வங்கி விவரங்களை அறிந்து கொள்வார்கள் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் பற்றிய தகவலையும் தெரிந்து கொள்வார்கள். இதுபோன்று உங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பேங்கில் லோன் எடுப்பார்கள், கிரெடிட் கார்டு வாங்குவார்கள். அதன்பின் லோன் பணத்தை கட்டாமல் விட்டு விட்டால் வங்கியில் இருப்பவர்கள் உங்களை வந்து தான் கேட்பார்கள். உங்கள் மீது தான் வழக்கு பதிவு செய்வார்கள் ஏனென்றால் உங்கள் விவரங்கள் தான் அதில் இருக்கும். எனவே பான் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

மேலும் Cibil score மூலம்  உங்களின் லோன் விவரங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் myscore .cibil.com இதுதான் உண்மையான இணையதளம் முகவரியாகும். இதுபோன்று பல போலியான இணையதளம் முகவரிகளும் உண்டு என்பதால் இதனை கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த இணையதள முகவரிக்கு சென்று உங்கள் அக்கவுண்ட் லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வங்கி பற்றிய தகவல்கள் அனைத்தும் இருக்கும்.

அதில் பார்த்து நீங்கள் எவ்வளவு பணம் எடுத்து உள்ளீர்கள், எவ்வளவு பணம் போட்டு உள்ளீர்கள், லோன்கள் சரியாக கட்டி உள்ளீர்களா என்ற தகவல்களை பார்த்துக் கொள்ளலாம்.

அதில் உங்கள் பெயரில் வேறு யாராவது லோன் வாங்கி உள்ளார்களா என்று தெரிந்தவுடன் வங்கியிலோ அல்லது போலீஸ் இடமோ புகார் தெரிவிக்க வேண்டும். இந்த புகாரை பற்றி நீங்கள் இணையதள முகவரி cybercrime.gov.in இதன் மூலமோ அல்லது toll free 1930 என்ற எண் பயன்படுத்தியும் புகார் செய்யலாம். மேலும் ஆன்லைனில் உங்கள் பான் கார்டு விவரங்கள் பற்றிய தகவல்களை கொடுக்கக் கூடாது.

இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் வரை அபதாரம் விதிக்கப்படலாம். இதனை வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளார்கள்.

எனவே பான் கார்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் பான் கார்டு விவரங்களை எந்த ஒரு இணையதளத்திலும் பதிவிடாதீர்கள். மேலும் பான் கார்டு ஜெராக்ஸ் கொடுத்தால் அதில் தேதி உங்கள் கையெழுத்தை போட்டுவிட்டு மற்றவரிடம் கொடுங்கள்.