அடேங்கப்பா 20 ரூபாய்க்கு இவ்வளவு உணவுகளா?? ரயில் பயணிகளுக்கு அட்டகாசமான செய்தி!!

0
119
Adengappa so much food for 20 rupees?? Great news for train passengers!!

அடேங்கப்பா 20 ரூபாய்க்கு இவ்வளவு உணவுகளா?? ரயில் பயணிகளுக்கு அட்டகாசமான செய்தி!!

பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உதவும் வகையிலும் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையிலும் சிறப்பு பேருந்துகளை ரயில்வே துறை இயக்கி வருகின்றது.

மேலும் ரயில்லில் பயணம் செய்ய தொலை தூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் நலன் கருதி அவர்களுக்கு தங்கும் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது .

இந்த வகையில் இனி பயணிகள் குறைந்த விலையில் வயிறார உண்ண உணவு வழங்கப்பட உள்ளது. ரயிலில் ஜெனரல் கோச்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எக்கனாமி என்ற புதிய திட்டத்தின் மூலம் மலிவான விலையில் உணவு வழங்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் இனி ரூ.20 உணவு வழங்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஜெனரல் கோச் பெட்டிகளுக்கு அருகே உணவு கூடங்களை அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு மலிவான விலையில் வழங்கப்படும் உணவு வகை 7 பூரி மற்றும் உருளைகிழங்கு மசாலா வழங்கப்பட்ட உள்ளது.அந்த வகையில் ரூ.50 ரூபாய்க்கு சோறு ,ராஜ்மா,கிச்சடி குல்சா ,பாவ் பஜ்ஜி போன்ற உணவுகள் வழங்கப்பட உள்ளது.