அடிலெய்டு டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி!
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் முச்சதம் 335ரன்கள் , மார்கஸ் லபுஸ்சேன் சதமும்162ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் நிலையை சந்தித்தது.

8-வது வீரராக களம் இறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா முதல் முறையாக சதம் அடித்தார். அவர் 113 ரன்னும், பாபர் ஆசம் 97 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 6 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
387 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் என்ற பரிதாபத்தில் இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 248 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.
தொடக்க வீரர் ஷான் மசூத்தும், ஆசாத் சபீக்கும் 4-வது விக்கெட்டுக்கு கடுமையாக போராடினார்கள். பாகிஸ்தான் 32.1 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. 82 ஆம் ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 239 க்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானை வென்றது. ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.