முதுநிலை மருத்துவ படிபிற்கான மாணவர் சேர்க்கை!! கடைசி தேதியை அறிவித்த தமிழக அரசு!!
இன்று மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் மருத்துவ படிப்புகள் பயில முடியும்.
இவ்வாறு நீட் தேர்வு கட்டாய மாக்கப்பட்டதால் அனைவரும் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கனவாக வைத்து இருகின்றனர். மருத்துவ படிப்புகள் குறித்து பல்வேறு தகவல்களை அரசானது வெளியீட்டு வருகன்றது.
அந்த வகையில் முதுநிலை படிப்புகளுகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் மட்டும் எம்டி மற்றும் எம்எஸ் போன்ற படிப்புகளுக்கு மட்டும் சுமார் 4200 இடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 50 சதவீத அகில இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 50 சதவீதத்தில் மாநில மாணவர்களை நிரப்ப மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு முது நிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது அதன் பின்னர் அதற்கான விண்ணப்பங்களும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது.
விண்ணப்பம் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் இன்றுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இனி விண்ணபிக்காத மாணவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் https://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அரசு கூறியுள்ளது. மேலும் இந்த படிபிற்கான மாணவர் சேர்க்கையில் மலை பிரதேசத்தில் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ படிப்புகளின் சேர்க்கையின் பொழுது ஊக்க மதிப்பெண் வழங்கப்படும்.