Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!!

Affected by cancer!! Ex-CSK Player Undergoes Surgery!!

Affected by cancer!! Ex-CSK Player Undergoes Surgery!!

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!!
முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு கேன்சர் நோய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், படிப்படியாக குணம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 28 ஒரு நாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் அவர்களுக்கு கேன்சர் நோய் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவருக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஸ்கிரீனிங் சோதனை எடுத்து பார்த்த போது, சாம் பில்லிங்ஸ் அவர்களின் மார்புப் பகுதியில் புற்று நோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சாம் பில்லிங்ஸ் அவர்களுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் சாம் பில்லிங்ஸ் படிப்படியாக குணம் அடைந்து வருவதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் பில்லிங்ஸை ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2018ம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு இவரும் ஒரு காரணம். அதன் பிறகு 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கும், 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கும் சாம் பில்லிங்ஸ்  விளையாடியுள்ளார்.
Exit mobile version