அவருடைய ஓய்வுக்கு பிறகு இந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை… இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…

0
114

 

அவருடைய ஓய்வுக்கு பிறகு இந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை… இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…

 

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவரின் ஓயீவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் இந்த ஒரு பிரச்சனை மட்டும் இன்னும் முடியாமல் இருக்கின்றது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

 

அதாவது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சமீபத்தில் கூறியுள்ளார்.

 

ஐசிசி நிர்வாகம் நடத்தும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013ம் ஆண்டு நடைபெற்ற சேம்பியன்ஸ் ட்ராபி தொடரில் வென்று மகேந்திர சிங் தோனி தலைமையில் சேம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.

 

அதன் பிறகு இந்திய அணி விராட் கோஹ்லி தலைமையிலும் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியும் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி கோப்பையை இன்னும் கைப்பற்றவில்லை. சரியாக 20 வருடம் கழித்து இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என்று அழைக்கப்படும் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

 

அந்த பேட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் “இந்திய கிரிக்கெட் அணியில் 4வது இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரரை தேடும் பணிகள் நீண்ட வாரங்களாக நடைபெற்று வருகின்றது. ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங் அவர்களுக்கு பிறகு இந்திய அணியில் 4வது இடத்தில் களமிறங்கி விளையாடுவதக்கு சரியான வீரர் கிடைக்கவில்லை. ஆனால் நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி வந்தார். என்று கேப்டன்.ரோஹித் சர்மா அவர்கள் கூறியுள்ளார்.