பிரம்மாண்டமாக அரங்கேறும் அதிமுக மாநாடு!! அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

0
142
AIADMK conference to be staged on a grand scale!! Special trains running from all regions!!

பிரம்மாண்டமாக அரங்கேறும் அதிமுக மாநாடு!! அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மிகவும் வலுபெற்று வருகிறது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் பெரிய மாற்றத்தை கொண்டு வருமாறு அனைத்து கட்சிகளும் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், வருகின்ற இருபதாம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கு “ வீவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை பெருமளவில் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு வாரமாக திட்டமிட்டு வருகிறார். பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தொண்டர்களை ஆயிரக்கணக்கான வாகனங்களில் அழைத்து வர திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்கான வாகனங்களை அதிமுகவினர் இப்பொழுதே முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வருகிறது.

மாநாட்டில் தொண்டர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டிற்கு மொத்தம் ஐந்து லிருந்து பத்து லட்சம் பேர் வருவார்கள் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக நடத்தப்பட இருக்கும் இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள், வேன்கள் மற்றும் வாகனங்கள் இயக்க திட்டமிடப்படுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு வர உள்ள அதிமுக தொண்டர்களுக்காக பன்னிரெண்டு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது வருகின்ற பதினெட்டாம் தேதி அன்று சென்னையில் இருந்து புறப்பட உள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மதுரைக்கு வரும் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இயக்கவும் தெற்கு இரயில்வேயிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இது பற்றி ஏராளமான தகவல்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேசப்பட்டு வந்தது. மேலும், அதிமுக நிர்வாகிகள் தங்குவதற்காக நட்சத்திர ஓட்டல்கள், சிறிய ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள், லாட்ஜுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.