கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!
நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது பல பகுதிகளில் தினமும் பெய்ந்து கொண்டு இருக்கிறது.
இதனையடுத்து சென்னையில் இடி மின்னல் மற்றும் கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் உள்ள விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுள்ளது.
இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சி விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட மொத்தம் எட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலேயே சில நேரம் சுற்றி விட்டு பிறகு கீழே தரையிறங்கப்பட்டது.
சென்னையில் பெய்த இந்த கனமழையால் இங்கிருந்து செல்ல வேண்டிய மொத்தம் பன்னிரெண்டு விமானங்கள் முப்பது நிமிடங்கள் முதல் மூன்று மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டது.
இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் மேலும் சில நாட்கள் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதுமே சில பகுதிகளில் கனமழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லியில் கனமழையின் எதிரொலியாக 450 ஆண்டுகால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், யமுனை ஆற்றில் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. எனவே, இந்த கனமழையால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.