Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்தியாவில் வரலாற்று சாதனை படைத்த வீரர்!

சொந்த மண்ணில் தன்னுடைய பெயரை பதிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நியூஸிலாந்து அணியின் வீரர் அஜஸ் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றிலேயே தன்னுடைய பெயரை பதித்து இருக்கிறார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சை முடித்த சமயத்தில் ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் எழுந்து நின்று கைதட்டி இருக்கிறது இதெல்லாம் ஒரு இந்திய வீரர்காக இல்லை ஒரு நியூசிலாந்து வீரர் காக இந்திய அணியின் அத்தனை விக்கெட்டுகளையும் ஒரே ஆளாக நியூசிலாந்தின் அஜாஸ் பட்டேல் இந்தியாவை ஆல் அவுட் செய்து இருக்கிறார்.

ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் அத்தனை விக்கெட்டுகளை எடுப்பது என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சாதனை நூற்றாண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு இங்கிலாந்தைச் சார்ந்த ஜிம்மில் ஏக்கர், இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே என்று இருவர் மட்டுமே இந்த சாதனையை படைத்து இருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் மூன்றாவதாக மற்றும் 21ம் நூற்றாண்டின் முதல் வீரராக ஒரு அணியின் ஒட்டுமொத்த விக்கெட்டுகளையும் விழுத்திய அஜாஸ் படேல் தன்னுடைய பெயரை வரலாற்றில் பதித்து இருக்கிறார்.

இவர் நியூசிலாந்து அணிக்காக ஆடி வந்தாலும் அவர் ஒரு இந்தியர் என்று சொல்லப்படுகிறது குஜராத்தி குடும்பத்தில் பிறந்த இவர் எட்டு வயது வரையில் மும்பையிலேயே வளர்ந்தார் .அதன்பிறகு அவருடைய தந்தையின் தொழில் நிமித்தம் காரணமாக நியூஸிலாந்துக்கு இடம்பெயர்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த இவர் முதலில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆகவே பயிற்சி செய்து இருக்கிறார். 20 வயது வரையில் வேகப்பந்து வீச்சாளராக இருந்திருந்திருக்கிறார். ஆனால் நியூஸிலாந்து அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இவருக்கு இடமே கிடைக்கவில்லை. இதன் காரணமாக,தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டு பயிற்சியாளர் தீபக் பட்டேலின் ஆலோசனையின் அடிப்படையில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக மாறினார் என்று சொல்லப்படுகிறது. இதன் பின்னரே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகின. உள்ளூர் தொடரில் விளையாடிய அவர் தன்னுடைய அணிக்காக 2015 ,2016 2017 உள்ளிட்ட மூன்று ஆண்டுகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதன் மூலமாக ஆசிய மைதானங்களில் இவரை பிரதான சுழற்பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம் என்று நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை உண்டானது இதன் தொடர்ச்சியாகத்தான் இந்திய தொடருக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கான்பூரில் நடந்த முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே அவர் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை வான்கடே மைதானத்தில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது 10 விக்கட்டுகளையும் அஜாஸ் ஒருவர் மட்டுமே எடுத்து இருக்கிறார். அனில் கும்ளே கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரு தொடரில் ஒரே இன்னிங்சில் அவர் மட்டுமே 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version