இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்து நடக்க உள்ள இரண்டாவது போட்டிக்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிர பயிற்சியில் முக்கிய டெஸ்ட் போட்டி ஜாம்பவானான ஸ்மித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.மார்னஸ் லபுசானே வீசிய பந்தில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
மேலும் இரண்டாவது போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய அணி நடைபெற்ற 12 பகலிரவு போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் நடைபெறவுள்ள போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் வெளியேறிய நிலையில் தற்போது ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விளையாடுவாரா? மாட்டாரா? இந்நிலையில் ரசிகர்கள் இது இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்