Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

15 ரன்களுக்கு ஆல் அவுட்! டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த பரிதாபம்

Big Bash League 2022

Big Bash League 2022

15 ரன்களுக்கு ஆல் அவுட்! டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த பரிதாபம்

இந்தியாவில் நடக்கும் T20 கிரிக்கெட் போட்டியான IPL – இந்தியன் பிரிமியர் லீக் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் நடந்து வருவது போல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிக்பாஷ் லீக் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் நேற்று 5-வது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் – அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது. ஆனால்  சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியை கொடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இருவரும் ரன் எதுவும் எடுகாமல் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட் ஆகி வெளியேறினார். அடிலெய்டு அணியின் அபார பந்து வீச்சால் சிட்னி வீரர்கள் வந்த வேகத்தில் அவுட் ஆகி தொடர்ந்து வெளியேறினார்.

இறுதியில் 5.5 ஓவரில் சிட்னி தண்டர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த போட்டியில் படுதோல்வியடைந்தது. இதன் மூலமாக சிட்னி அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடிலெய்டு அபார வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 15 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். மேலும், ஒரு அணி எடுக்கும் குறைந்தபட்ச ரன் இதுவாகும். அடிலெய்டு அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஹெண்ட்ரி 2.5 ஓவரில் 1 மேடன் உள்பட 3 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல வாஸ் அஹர் 2 ஓவர் வீசி 6 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேதிவ் ஷார்ட் 1 ஓவர் வீசி 5 ரன் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

சிட்னி தண்டர்ஸ் 5.5 ஓவரில் 15 ரன்களுக்கு ஆல் அவுட் வீரர்களின் ரன் விவரம்:

அலெக்ஸ் ஹெய்ல்ஸ் – 0 (2) மேதிவ் ஹில்கெஸ் – 0 (2) ரிலி ரொசவ் – 3 (5) ஜெசன் சங்கா – 0 (2) அலெக்ஸ் ரோஸ் – 2 (4) டெனியல் சம்ஸ் – 1 (3) ஒலியல் டேவிஸ் – 1 (4) கிரிஸ் கிரீன் – 0 (6) குரிந்தர் சந்து – 0 (6) பிரண்ட் டக்கட் – 4 (2) பரூகி – 1 (2) நாட் அவுட் எக்ஸ்ட்ரா – 3 (ரன்கள்) மொத்த ரன் – 15 (5.5 ஓவர்கள்)

Exit mobile version