Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதிய மைல் கல்லை எட்டிய ஆல்-ரவுண்டர் டுவெய்ன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான டுவெய்ன் பிராவோ. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டிரின்பாகோ வீரர் டுவெய்ன் பிராவோ வீசிய பந்தில் லூக்கா அணியின் கார்ன்வெல் போல்ட் ஆகி வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றார். மேலும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் பெருமையையும் பிராவோ தட்டிச்சென்றார். டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்துள்ள போதும் டி20 போட்டியில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரும் பிராவோவே
ஆவார்.
Exit mobile version