Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

All schools open tomorrow!! A flying order to the headmasters!!

All schools open tomorrow!! A flying order to the headmasters!!

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதாவது கடந்த புதன் கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விடுமுறை அளித்த ஒரு வேலை நாளை ஈடு செய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்பட இருக்கிறது. எனவே, சென்னையில் உள்ள அனைத்து ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திங்கள் கிழமையின் பாட வேளைகளை வைத்து பள்ளிகள் அனைத்தும் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளும் நாளை செயல்படும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

எனவே, திங்கள் கிழமை பாட வேளையை பின்பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடத்தை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரும் லீவ் எடுக்காமல் கண்டிப்பாக பள்ளிகளுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது சென்னையில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version