செயற்கை இறைச்சிக்கு அனுமதி!! விரைவில் மக்கள் மத்தியில் விற்பனை!!

0
280
Allow artificial meat!! Selling soon among the masses!!

செயற்கை இறைச்சிக்கு அனுமதி!! விரைவில் மக்கள் மத்தியில் விற்பனை!!

சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைக் காட்டிலும், இறைச்சி மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கும், “வேகன்” எனப்படும் உணவு முறை தற்போது உலகம் முழுவதுமாக வளர்ந்து வருகிறது.

இந்த வேகன் உணவுமுறை உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பலனை தருவதாக இதனை பின்பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் தற்போது செயற்கையாக இறைச்சியை தாயாரிக்கும் சந்தையும் வளர்ந்து வருகிறது.

அதாவது ஒரு விலங்கின் செல்களை சோதனை கூடத்தில் வைத்து அதை பராமரித்து நன்கு வளர்ந்த பின்னர், அதை இறைச்சியாக தயாரிக்கும் முறையைத்தான் சோதனைகூட இறைச்சி அல்லது செயற்கை இறைச்சி என்று அழைப்பார்கள்.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் செயற்கையான முறையில் கோழி இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோழிக்கு உயிர் கிடையாது. செல்களை வைத்து இறைச்சிக்கு தேவையான பாகங்களை மட்டும் நமக்கு தேவையான வடிவத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த இறைச்சியை மக்கள் மத்தியில் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அரசு அனுமதியை வழங்கியுள்ளது. இதில் புரதச் சத்து மிகுந்து காணப்படுவதால், அனைவரும் இதை உண்ணலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் எந்த ஒரு தீமையும் ஏற்படாது. மேலும் விலங்குகளை கொன்று உண்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் அனைவரும் இருக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது விரைவில் மக்கள் மத்தியில் விற்பனைக்கு வர உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த இறைச்சியை உருவாக்க அதிக நாட்கள் தேவைப்படும் என்பதால், சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இறைச்சி தயாரிக்கும் நடைமுறை 2030 ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி அடையும் என்று அமெரிக்கா ஊடகங்கள் கூறுகிறது.