போலீசாருக்கு மாற்று விடுப்பு!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!
தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு விடுமுறை என்பதே பெரிதும் இல்லை.மேலும் எதாவது அவசர விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பல கட்டுபாடுகள் உள்ளது.
எனவே தமிழகத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் முதல் சப் இன்ஸ்பெக்ரர் வரை பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து போக்குவரத்து மேலாண்மை .விசாரணை சட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ,சட்ட ஒழுங்கு துறை காவலர்கள் போன்ற அனைவருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விடுப்பு இல்லாமல் பணி செய்யும் காவலர்கள் மிகவும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.அதனால் விடுமுறை நாட்களில் பணியாற்றும் போலீசார்கள் அதற்காக பணி விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இவை அனைத்தும் காவல் துறையின் அவசர நிலை அரசு அவர்களுக்கும் உதவும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.மேலும் அவசர நிலையில் விடுப்பு எடுக்கும் காவலர்களை பணிக்கு அழைக்கின்றனர் என்பதால் அவர்களின் வார விடுமுறை போவதாக கூறப்படுகின்றது.
இதனை சரி செய்யும் விதமாக போலீசாருக்கு மாற்று விடுப்பு வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.மேலும் அவசர நிலையில் விடுப்பு எடுக்கும் காவல் அதிகாரிகள் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் மாற்று விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதன் மூலம் அவர்களின் வார விடுப்பில் பாதிப்பு ஏற்படாது என்று அரசு அறிவித்துள்ளது.