Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் கூட படைக்காத சாதனை… ஆண்டர்சன் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் கூட படைக்காத சாதனை… ஆண்டர்சன் எட்டிய மைல்கல்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் இதுவரை டெஸ்ட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளார்.

கிரிக்கெட்டின் புராதன வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் இன்னமும் தன் கவர்ச்சியை இழக்காமல் உள்ளது. பல வீரர்களும் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் டி 20 கிரிக்கெட்களின் வரவால் அதிகளவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில்லை. அதனால் இப்பொதெல்லாம் ஒரு கிரிக்கெட் வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே எட்டாக் கனியாகியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே படைக்காத சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் வரலாற்றில் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றார். மான்செஸ்டரில் தற்போது நடந்துவரும் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்த சாதனையை படைத்தார்.

72 வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருந்தாலும், யாரும் சொந்த மண்ணில் 100 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடவில்லை. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரரான சச்சின் டெண்டுல்கர், இந்தியாவில் 94 போட்டிகளில் பங்கேற்று பட்டியலில் ஆண்டர்சனுக்குப் பின்னால் உள்ளார். அதே போல ரிக்கி பாண்டிங் சொந்த மண்னான ஆஸ்திரேலியாவில் 91 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணி வீரர் ஸ்டூவர்ட் பிராட் 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது அவர் கிரிக்கெட் விளையாடி வருவதால் அவரும் இந்த சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version