அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!!
தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதாவது, அண்ணாமலை என்பவர் பாஜகவின் மாநில தலைவர் மட்டும்தான். எங்களுக்கு இவர் முக்கியமே கிடையாது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் ஜெபி நட்டா ஆகியோர்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள்.
கூட்டணி கட்சி கூட்டத்தில் கூட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி அருகில் அமர வைத்து பேசினார். பிரதமருக்கு கூட எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரிந்துள்ளது.
ஆனால் ஏன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று செல்லூர் ராஜு கூறி உள்ளார். அதாவது என்னதான் கூட்டணி கட்சிகளாக அதிமுகவும் பாஜகவும் இருந்தாலும்,
எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் சிறு சிறு உரசல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் வரபோகின்ற மக்ளவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் கொங்கு மண்டலங்கள் வேண்டும் என்று அண்ணாமலை கேட்டது தான் என்று தகவல்கள் வெளிவந்தது.
கொங்கு மண்டலங்களை பொறுத்த வரை அதிமுக தான் அங்கு கொடிபிடித்து நிற்கிறது. இதை பாஜக கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்று எடப்பாடியும் கொந்தளித்ததாக தெரிகிறது.
இதன் வெளிப்பாடாகத்தான், ஜூலை 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தும் அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், தற்போது அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குள்ளாகும் விதமாக பேசி உள்ளார்.