மீண்டும் புதிர் போட்ட அண்ணாமலை!! டெல்லிக்கு திடீர் பயணம்!!
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திடீரென்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இன்று காலை 7 மணி அளவில் டெல்லிக்கு சென்று விட்டார்.
இவர் திடீரென்று டெல்லிக்கு சென்றதற்கு காரணம் தெரியவில்லை. இவருக்கு முன்புதான் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் ஐந்து நாட்கள் தங்கி இருந்தார்.
அங்கு அவர் மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பலரை சந்தித்து விட்டு நேற்று இரவு தான் தமிழகத்திற்கு வந்தார். ஒருவேளை இதனால் தான் அண்ணாமலையும் அவசர அவசரமாக டெல்லிக்கு சென்றுள்ளாரா என்று அனைவரின் மத்தியிலும் ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மற்றொரு பக்கம், அண்ணாமலை ஜூலை 28 ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் தனது நடைப்பயணத்தை துவங்க உள்ளார். இந்த நடைப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதியில் சென்னையில் நிறைவடைய உள்ளது.
இந்த நடைப்பயணம் துவக்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து கலந்துரையாட தான் டெல்லிக்கு சென்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த நடைப்பயணமானது திருச்செந்தூரில் இருந்து துவங்கப்பட இருந்த நிலையில், திடீரென ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டது ஏற்கனவே அனைவரிடமும் குழப்பத்தை எற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், தற்போது இவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
திடீர் பயணத்திற்கு என்ன காரணம் என்று அனைவரும் கேள்வியை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.