அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள விவகாரம்!!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரிலிருந்து தமிழகம் வரை நடைப்பயணம் வருவதாக இருந்த நிலை தற்போது ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார்.
பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்ல இருக்கிறது.
இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த 168 நாட்கள் கொண்ட நடைப்பயணம் அமையும் என்று பாஜக கட்சி நம்பிக்கையாக இருக்கிறது.
சில பகுதிகளில் மட்டுமே அண்ணாமலை நேரடியாக கலந்து கொள்வார், மீதி உள்ள பகுதிகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அண்ணாமலையையே முழு நடைப்பயணத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மேற்கொண்ட “வேல் யாத்திரை” பல பேராலும் பேசப்பட்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும், இவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிட்டவும் இந்த யாத்திரை உதவியது. அண்ணாமலையால் நடத்தப்படும் இந்த யாத்திரையானது சென்னையில் நான்கு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த நடைப்பயணத்திற்கு காவல் துறையினரும் அனுமதி வழங்கியுள்ளனர்.