Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!!

Annamalai will buy land for BJP executive!! He became a hero in one day!!

Annamalai will buy land for BJP executive!! He became a hero in one day!!

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் உள்ள 234  தொகுதிகளுக்கும் பாத யாத்திரை செல்ல துவங்கி உள்ளார்.

இந்த விழாவானது நேற்று ராமேஸ்வரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்றது. இவரின் பாத யாத்திரையை துவங்கி வைக்க மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்திருந்தார்.

நேற்று துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் இந்த பாத யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை மக்களிடம் மோடியின் சேவைகளை பற்றி விரிவாக கூற இருக்கிறார்.

இவ்வாறு “எம் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் தனது பாத யாத்திரையை சிறப்பாக ராமேஸ்வரத்தில் துவங்கி உள்ளார். அப்போது பாஜக நிர்வாகியான முருகன் வீட்டிற்கு அண்ணாமலை தனது கட்சிக்காரர்களுடன் சென்று அமர்ந்து தேநீர் அருந்தினார்.

அப்பொழுது முருகன் ஏழ்மையான வீட்டில் மிகவும் சிரமப்பட்டு வாழ்வது குறித்தும், வாடகை வீட்டில் எப்படி வாழ்கிறீர்கள் என்பது குறித்தும் பேசி கொண்டிருந்தார்.

பிறகு உடனே அருகில் இருந்த கட்சிக்காரர் ஒருவரிடம் மூன்று சென்ட்டில் ஒரு நிலம் பாருங்கள் உடனடியாக முருகனுக்கு வாங்கி கொடுத்து விடுவோம் என்று கூறினார்.

இதனை கேட்ட பாஜக நிர்வாகியான முருகன் அதிர்ச்சி அடைந்து மகிழ்ச்சியில் அண்ணாமலையின் காலில் விழ சென்றார். இவ்வாறு நடைப்பயணம் துவங்கப்பட்ட முதல் நாளே அண்ணாமலை அனைவரிடமும் ஹீரோவாக காட்சியளிக்கிறார்.

Exit mobile version