Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேலும் ஒரு வீரருக்குக் காயமா?… இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு!

மேலும் ஒரு வீரருக்குக் காயமா?… இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு!

இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த அணியில் ஒரு வீரருக்குக் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார்.

 தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகினார். அவருக்கு பதில் சிராஜ் இந்த தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சஹார் காயம் காரணமாக இப்போது அவரும் அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவருக்குப் பதில் மாற்று வீரர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அனேகமாக ஷர்துல் தாக்கூர் மாற்று வீரராக தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை அக்டோபர் 23 ஆம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.  அடுத்தடுத்து வீரர்களின் காயத்தால் இந்திய அணி பலவீனமடைந்துள்ளது.

Exit mobile version