இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணி நியமன ஆணை!! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!!
இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணிக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியமானது தேர்வை நடத்தியது. இதில் தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 143 பேருக்கு இன்று பணி நியமன ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதனுடன் சேர்த்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
நெல்லையில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் மொத்தம் 306 அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் புதிதாக திறன் வகுப்புகள் ரூபாய் 6.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் ரூபாய் 210 கோடி மதிப்பில் புதிய மின்கலன் பரிசோதனை ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையும் முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொளி மூலமாக திறந்து வைத்தார். இந்த பரிசோதனை ஆய்வகத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
அடுத்து, பள்ளிகல்வித்துறை பணியாளர்களாக இருந்து உயிரை விட்டவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகன விபத்திற்கான பரிசோதனை ஆய்வகம் துவங்கப்பட உள்ளது.
எனவே, இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் செய்து வைத்தார்.