Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!!

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!!

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும்.

இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.

அது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அறை. நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.

பெண்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், 40 வயதை கடந்தவர்கள் மற்றும் குழந்தை பிரசவம் நடந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு பித்தப் பையில் கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.

இன்சூலின் எதிர்ப்புத்தன்மை காரணமாக பித்த நீர் சுரப்பது அதிகளவில் இருக்கும். அதனால் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகக்கூடும். மேலும் குழந்தைப் பேறு அடைந்த பெண்களுக்கு பித்த நீர் அதிகளவில் சுரக்கும்.

அப்போது அவர்களுக்கும் பித்தப்பையில் கல் உருவாகலாம். இவ்வாறு உருவாகும் பித்த கற்களை சுலபமாக வீட்டிலிருந்தபடியே சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

மாதுளம் பழம்

மிளகு

புதினா இலை

அதிமதுரம்

பனங்கற்கண்டு

செய்முறை

1: முதலில் ஒரு மாதுளம் பழத்தை எடுத்துக்கொண்டு அதன் தோள் முழுவதையும் நீக்கிவிட்டு அதன் உள்ளிருக்கும் பல்பகுதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2: பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3: அதே மிக்ஸி ஜாரில் ஆறு மிளகு மற்றும் புதினா இலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4: இதனையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

5: அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாதுளைச் சாறு மற்றும் புதினா சாறு இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6: இவற்றுடன் ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7: பின்னர் சுவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பித்த கற்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்.

 

Exit mobile version