Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

Are star marked currency notes acceptable?? Notice issued by Reserve Bank!!

Are star marked currency notes acceptable?? Notice issued by Reserve Bank!!

நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

சில நாட்களாகவே நாட்டில் இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா செல்லாதா என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பாகத்தான் ரிசர்வ் வங்கியானது இரண்டாயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கியானது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், நட்சத்திர குறியீடு கொண்ட ஐநூறு ரூபாய் நோட்டுகள் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நட்சத்திர குறியீடுகள் கொண்ட நோட்டுகளின் தன்மை பற்றியும் அது செல்லுமா செல்லாதா என்பது பற்றியும் இந்த அறிவிப்பில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதாவது, தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளுக்கு பதிலான நோட்டுகளில் நட்சத்திர குறியீடு ஒன்று பதிக்கப்பட்டிருக்கும். எல்லா நோட்டுகளிலும் வரிசை எண்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் இந்த வகை ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்களுக்கு மாற்றாக நட்சத்திர குறியீடு காணப்படும்.

தவறாக அச்சிடப்பட்ட சில ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக இந்த நட்சத்திர குறியீட்டை கொண்ட நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே, மற்ற ரூபாய் நோட்டுக்களை போலவே இந்த நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்களும் செல்லும் என்று கூறி உள்ளது. இது மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் எனவும், ரிசர்வ் வங்கி சற்று முன்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, செல்லுமா செல்லாதா என்று யாரும் தவறான கருத்துக்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exit mobile version