கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!
தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போட்டிகளின் அட்டவணை வெளிவந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற அணிகள் விளையாட உள்ளர்கள்.
மேலும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. மேலும் முதல் அறை இறுதி போட்டி நவம்பர் 15 ஆம் தேதியும் இரண்டாவது அறை இறுதி போட்டி நவம்பர் 16 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிக்களும் மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் நடைபெறயுள்ளது.
முதல் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெறயுள்ளது. அதனையடுத்து இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அலகாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில்டிக்கெட் விற்பனை மற்றும் டிக்கெட் கட்டணம் தொடர்பாக மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஜூலை 31 ஆம் தேதி பிசிசிஐ யை இது பற்றிய தகவலை வெளியிட வேண்டும் என்று அறிவித்திருந்தது.
மேலும் 4 வது முறை ஐசிசி உலக கோப்பைகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இது பற்றிய அனைத்து தகவல்களையும் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஆன்லைன் விற்பனை தொடங்கினாலும், போட்டி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு நேரடி டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் ஆன்லைன் டிக்கெட் வைத்திருந்தால் மையத்திற்குல் அனுமதிக்கபடாது என்றும், நேரடியாக வாங்கிய டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதனியடுத்து போட்டி நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு 40 டிக்கெட்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு உலக கோப்பை போட்டிக்கும் 300 டிக்கெட்கள் ஐசிசி மற்றும் பிசிசிஐ க்கு வழங்கப்படும். அதனை தொடர்ந்து இது போன்ற முக்கிய தகவல்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.