வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா.. டாப் லோட் Vs பிரன்ட் லோட்!! எது சிறந்தது?? எதை வாங்க வேண்டும்!!

Photo of author

By Janani

வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா.. டாப் லோட் Vs பிரன்ட் லோட்!! எது சிறந்தது?? எதை வாங்க வேண்டும்!!

Janani

Are you going to buy a washing machine.. Top load Vs front load!! Which one is better?? What to buy!!

இன்று வளர்ந்து வரும் உலகில் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு என இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதால் வீட்டில் உள்ள வேலைகளை செய்வதற்கு என பல்வேறு இயந்திரங்களை வாங்கி வைத்துள்ளனர். அவற்றுள் ஒன்றான வாஷிங்மெஷினை எவ்வாறு பராமரித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பது குறித்து காண்போம்.

நாம் பயன்படுத்தும் வாஷிங் மெஷினில் இரண்டு வகைகள் உள்ளது 1. டாப் லோடு 2. பிரண்ட் லோடு.

1. டாப் லோடு: இதில் துணிகளை மேல் வழியாக உள்ளே வைப்போம். இந்த வகையில் துணிகளை துவைப்பதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். இதில் துணிகளை போட்டதும் முன்னும் பின்னும் ஆக சுழலும். இதனால் துணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

ஆனால் இந்த டாப்லோடு வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும் பொழுது நம் எவ்வாறு நமது கைகளால் அழுக்குகளை தேய்த்து துவைப்போமோ அதேபோலவே நன்றாக துவைத்து கொடுக்கும்.

2. பிரண்ட் லோடு: இதில் துணிகளை முன்பக்கமாக வைப்போம். இதில் துணிகள் வட்ட வடிவில் சுற்றி சுற்றி துவைக்கப்படும். எனவே இந்த வகை வாஷிங் மிஷினில் அந்த அளவிற்கு துணிகளுக்கு பாதிப்பு வராது என்று கூறப்படுகிறது. எனவே துணிகள் மிருதுவாகவே இருக்கும்.

டாப் லோடு வாஷிங் மிஷினில் தண்ணீர் அதிக அளவு தேவைப்படுவதால் துணிகளை துவைக்கும் பொழுது நுரை அதிகமாக வருமாறும் ,அதிக வேலைபாடுகளை செய்யக்கூடியதாகவும் பவுடர்கள் அல்லது லிக்யூடுகள் தயாரிக்கப்படும்.

பிரண்ட் லோடில் தண்ணீர் அதிக அளவு தேவைப்படாது அதனால் அதற்கு ஏற்றவாறு நுரை கம்மியாக வரும் பவுடர்கள் மற்றும் லிக்யூடுகள் தயாரிக்கப்படும். அப்பொழுதுதான் துணிகளில் உள்ள அழுக்குகள் விரைவில் போகும்.

பவுடர் பயன்படுத்தி வாஷிங் மிஷினில் துணிகளை துவைக்கும் பொழுது துணிகளின் மேல் இந்த பவுடர் ஒழுங்காக கரையாமல் ஒட்டிக்கொள்ளும். அதேபோன்று வாஷிங் மிஷினில் உள்ள சிறு சிறு துவாரங்களிலும் இந்த பவுடர் தேங்கி சீக்கிரமாக வாஷிங் மெஷின் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவேதான் லிக்யூடுகளை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது விரைவில் கரைந்து விடுவதால் நமது வாஷிங் மெஷின் சேதம் ஆகாமல் இருக்கும். லிக்யூடுகளை வாங்கும் பொழுது டாப் லோடு மற்றும் பிரண்ட் லோடு லிக்யூடுகளை பார்த்து வாங்க வேண்டும். அதேபோன்று மாதத்தில் ஒருமுறையாவது வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வேண்டும்.