Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!!

0
82

Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!!

ஒரு நிறுவனமானது பணியாட்களை தேடி வருகிறது என்றால் அதற்கு இரண்டே காரணம் தான் இருக்கும். முதல் காரணம் அந்த கம்பெனியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதை செய்வதற்கு ஒரு ஆளை தேடுவார்கள். இரண்டாவது அந்த கம்பெனியின் உரிமையாளர் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளை ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படைத்து விட்டால் அந்த உரிமையாளர் கம்பெனியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளை செய்யலாம் என்பதற்காக பணியாளர்களை தேர்வு செய்வார்கள். இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே ஒரு நிறுவனமானது பணியாட்களை தேர்வு செய்யும்.

நாம் ஒரு இன்டர்வியூக்கு செல்கிறோம் என்றால் நம்மிடம் டிகிரி இருந்தால் மட்டுமே நம்மை வேலைக்கு தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பணிக்கென சில திறமைகள் இருக்கும் அந்த திறமை இருக்கும் நபரை மட்டுமே அந்த நிறுவனமானது இன்டர்வியூவில் தேர்வு செய்யும். உதாரணத்திற்கு இரண்டு நபர்கள் நேர்முகத் தேர்விற்கு வருகிறார்கள் என்றால் அதில் டிகிரி அதிகம் வைத்திருப்பவர்களை அந்த நிறுவனம் தேர்வு செய்யாது. மாறாக இருவரில் யாருக்கு அந்தப் பணிக்கென இருக்கின்ற திறமைகள் இருக்கிறதோ அவர்களையே தேர்வு செய்வார்கள்.

இது தெரியாமல் தினமும் ஏராளமானோர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு வருகின்றனர். அவர்கள் கலந்து கொள்வதை மட்டுமே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே அந்த கம்பெனி எதிர்பார்க்கக் கூடிய திறமை என்னவென்று யாரும் கவனிப்பதில்லை. எனவே நாம் ஒரு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக அவர்கள் எதிர்பார்க்கக் கூடிய திறமைகளை நம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டு பிறகு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

சில பேர் நேர்முகத் தேர்வில் படிப்பு மற்றும் திறமை இரண்டின் மூலமாகவும் சிறந்து விளங்கி தேர்வு செய்யப்பட்டு பிறகு HR அதிகாரியிடம் பேசும்போது நேர்முகத் தேர்வில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் படிப்பு மற்றும் திறமைகளை மட்டுமே பார்க்காமல் அதையும் தாண்டி நம்முடைய பழக்க வழக்கங்களை பார்ப்பார்கள். அதாவது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வளரக்கூடிய எண்ணம் நம்மிடம் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.

மேலும் நிறுவனத்தில் இன்னும் என்ன சிறப்பம்சங்கள் செய்தால் இந்த நிறுவனம் முன்னேறும் அதற்காக நாம் எவ்வாறு உழைக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்கின்ற மனப்பான்மை நம்மிடம் இருக்கிறதா என்பதையும் பார்ப்பார்கள். எனவே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லாமல் அதற்கு என்ன செய்ய வேண்டும் எப்படி நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நம்முடைய மனப்பக்குவம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.