வாயு பிடிப்பு தொல்லையிலிருந்து நீங்க நினைப்பவர்களா?? இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்!!
பத்து நிமிடத்தில் உடம்பில் தேங்கிய கெட்ட வாயுவை நீக்கி வாயுபிடிப்பை போக்கும் எளிய முறை.வாயுத் தொல்லை இருக்கே வந்தாலும் பிரச்னை. வரலன்னாலும் பிரச்னை. சில பேருக்கு சாப்பிட்டா உடனே வாயுத் தொல்லை அதிகமாகிவிடும். ’
கல்யாண வீட்டுக்குப் போன நிம்மதியா சாப்பிட முடியல, விருந்துக்கு போனா பிடிச்சதைச் சாப்பிட முடியல’ என்று இப்படி நினைப்பவர்கள் பெரும்பாலும் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்களாகத் தான் இருப்பார்கள்.
இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். வயிற்றில் வாயு தங்க இரண்டு விதமான காரணங்கள் உள்ளன.
உணவு சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும் போதோ ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் வயிற்றுக்குள் நுழைந்து வாயுத் தொல் லையை ஏற்படுத்துகிறது.எனவே இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்
இதனை எதற்கு பயன்படுத்துகிறோம் என்றால் வாய்வு தொல்லை இருக்கும் பொழுது வயிறு வலி பிரச்சனையும் இருக்கும் அதனால் அதனை சரி செய்வதற்கு வெந்தயம் பயன்படுத்தும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
சீரகம்
ஓமம்
இந்து உப்பு
பெருங்காயம்
செய்முறை:
1: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அரை டீஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் அரை டீஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் பின்பு அதில் சிறிதளவு பெருங்காயம் தூள் மற்றும் இந்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனை நாம் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் பத்து நிமிடத்தில் நம் உடம்பில் உள்ள வாயு பிரச்சனை ஏப்பம் மூலமாக வந்துவிடும். மற்றும் வாயு வெடிப்பும் தெரிந்துவிடும்.
இதுபோன்ற வாயு பிரச்சனை வாயு வெடிப்பு இருந்தால் இந்த பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது அவசர அவசரமாகவோ அல்லது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிப்பதோ இது போன்ற இருந்தால் வாயு பிரச்சனை வரும்.