அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா?? இதை மட்டும் செய்தாலே போதும்!!

0
197

அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா?? இதை மட்டும் செய்தாலே போதும்!!

படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான தோல் நோய் தொற்றாகும்.படர்தாமரை என்று சொல்லப்படும் இந்த தோல் நோயை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விட்டால் பின் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது.

ஆனால் இந்த பிரச்சனையை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் பிறகு சருமம் தடிப்பு மற்றும் அரிப்பு என்று பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். டெர்மடொஃப்ட் என அழைக்கப்படும் ஒரு பூஞ்சை தொற்றினால், படர்தாமரை ஏற்படுகிறது.

இந்த படர்தாமரையானது உடல் மற்றும் உடைகள் சுத்தமாக இல்லாதவர்களுக்கு பூஞ்சைகளினால் தொற்றப்பட்டு ஏற்படக்கூடியது.

சாதரணமாக சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த படர்தாமரை அதிகமானால் உடம்பில் கடுமையான சொரியாசிஸ் போன்ற அரிப்பை ஏற்படுத்தும்.

இது மட்டுமல்லாமல் படர்தாமரை உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பையும் அல்லது துண்டு போன்ற வேறு சில பொருட்களை வேறு யாராவது பயன்படுத்தினால் இது அவர்களுக்கும் தொற்றும்.

அப்போ படர்தாமரை வந்துவிட்டால் அது போகுமா என்று சிலருக்கு கேள்வி இருக்கும்.இதனை நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இரண்டு நாட்களில் படர்தாமரை சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

வேப்பிலை பொடி

மஞ்சள் தூள்

இஞ்சி

எலுமிச்சை பழம்

செய்முறை

1: முதலில் வேப்பிலை பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும் இவை உங்களுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

2: பின்னர் வீட்டில் உள்ள மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

3: பிறகு இஞ்சியை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

4: அரைத்த இந்த இஞ்சி சாற்றுடன் வேப்பிலை பொடி மற்றும் மஞ்சத்தூளை சேர்த்துக் கொள்ளவும்.

5: இவற்றுடன் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதில் அரை எலுமிச்சை பழத்தை இதனுடன் பிழிந்து விட வேண்டும்.

6: இவற்றின் நான்கையும் நன்கு கலந்து ஒரு பேஸ்ட் போன்று வரும்வரை கலக்க வேண்டும்.

7: பேஸ்ட்டை உங்களுக்கு எந்த இடத்தில் படர்தாமரை உள்ளதோ அந்த இடத்தில் தடவ வேண்டும்.

பிறகு 2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் விட்டு அந்த இடத்தில் சோப்பு பயன்படுத்தாமல் குளிக்க வேண்டும்.

இதனை இரவு நேரத்திலும் தடவி மறுநாள் காலை குளிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை 1 வாரத்திற்கு செய்து வர பிரச்சனை குணமாகும்.