Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெட்கமே இல்லையா?… பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி… – வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்!

#image_title

வெட்கமே இல்லையா?… பாக்.வீரர்களுடன் ஜாலியா பேசிய கோலி… – வெளுத்து வாங்கிய முன்னாள் ராணுவ வீரர்!

பாகிஸ்தான் வீரர்களுடன் உங்களுக்கு நட்பு தேவையா என்று விராட் கோலிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று காஷ்மீரில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு இந்திய தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக இது குறித்து மேஜர் பவன் குமார் என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் பாகிஸ்தானுடன் விளையாடும் போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவுக்கு வர வேண்டும். பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏன் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட வேண்டும்.

நேற்று காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களை கட்டி அணைத்து அவர்களுடன் நட்புடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த கோலி ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கோலி என்ன பிசிசிஐ தலைவரா? சம்பந்தமே இல்லாமல் ஏன் விராட் கோலியை இந்த விஷயத்தில் இழுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Exit mobile version