அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

0
221

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விளையாட்டு திருவிழாவில் மிக முக்கியமானது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இந்த விளையாட்டு போட்டி கருதப்படுகிறது. இந்நிலையில்,22 வது கால்பந்து திருவிழா கத்தாரில் டிசம்பர் 18 தொடங்கி 29 நாட்கள் நடைபெற உள்ளது.

8 பிரிவுகளில் உள்ள அணிகளும் தங்கள் பிரிவுக்களில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். அதனை அடுத்து, காலிறுதி போட்டியும் அதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியிலும் போட்டியிடும்.இந்நிலையில், உலகக்கோப்பையை வெல்லும் என ரசிர்களால் எதிர்பார்க்கப்பட்டும் அர்ஜெண்டினாவும் சவுதி அரேபியாவும் இன்று மோதின.

இந்த போட்டியை காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. காரணம் அந்த அணியின் நட்சத்திர ஆட்டகாரான மெஸ்ஸி என்பது மிகையாகாது. 35 வயதான அவருக்கு இந்த உலகக்கோப்பை கடைசி உலககோப்பை போட்டியாக இருக்கலாம் என்பதால் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் அர்ஜண்டினா வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடக்கம் முதலே வெளிப்படுத்தினர். 10 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மெஸ்ஸி அதனை கேலாக மாற்றினார்.

ஆனால், இரண்டாவது பாதி ஆட்டம் சவுதியின் பக்கம் சென்றது ஆட்டத்தின் 48 வது நிமிடத்தில் சலே அல்ஷெரியும் 53வது நிமிடத்தில் சலேம் அல்தாவசாரியும் கோல் அடித்தனர். போட்டியை சமன் செய்ய அர்ஜெண்டினா போராடியும் சரியான வாய்ப்பு அமையவில்லை. இதனால், 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை சவுதி அரேபியா வீழ்த்தியது.