Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது.

இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி ஆகியவற்றிற்கு நம் உடலில் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பதும் காரணமாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.

கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, சில வைட்டமின்களின் (வைட்டமின் டி3) பற்றாக்குறை நமக்கு உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. அதனால் முறையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வலி ஏற்படும் போது பெரும்பாலானோர் மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று எண்ணி மருத்துவரை அணுகாமலேயே மாத்திரை சாப்பிட்டு விடுகிறார்கள்.

ஆனால் அது மிகவும் தவறானது. அதைவிட எந்தவித பக்க விளைவுகளும் இன்றி இதனை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

ஓமம்

மிளகு பொடி

பிரியாணி இலை

வெள்ளம்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 250 ml தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டிலிருந்து மூன்று அளவு வரை உள்ள பிரியாணி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்த பின்னர் ஒரு கிளாஸில் வடிகட்டி எடுத்துக்கொண்டு சுவைக்காக ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெள்ளத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இவற்றை நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் அந்த நீரில் உள்ள கால்சியத்தால் உங்கள் உடம்பில் உள்ள எலும்புகள் பலமாகும்.

Exit mobile version