இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் தற்போது முதல் போட்டியில் அஸ்வின் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் வேண்டும் என திட்டமிட்டுள்ளனர் பும்ரா மற்றும் கம்பீர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகள் கட்டாயம் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி ப்ளேயிங் லெவனில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது.
ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்பதால் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த ப்ளேயிங் லெவனில் அஷ்வின் வேண்டும் என பும்ரா மற்றும் கம்பீர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியுடனான இதற்கு முன் நடந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அதனாலேயே பெர்த் மைதானத்தில் முதல் போட்டியை நடத்த உள்ளது. இந்த மைதானத்தில் வேக பந்து வீச்சாளர்கள் 102 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் 37 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்த போட்டியில் ஒரு ஸ்பின்னர் அஸ்வின் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியுடன் களமிறங்க உள்ளது இந்திய அணி.